துறையூர் அருகே வாலிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது

3 days ago 3

துறையூர், மார்ச் 28: துறையூர் அருகே நடந்து சென்ற வாலிபரை மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா திருத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாவி மகன் கார்த்திக்(35). சமையல் தொழிலாளி. இவர் நேற்று துறையூர் அருகேயுள்ள வெங்கடேசபுரத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டி அந்த ஊரிலுள்ள காமாட்சியம்மன் கோயில் அருகே நடந்து சென்றாராம்.

அப்போது மர்ம நபர் ஒருவர் கார்த்திக்கின் வாயைப் பொத்தி அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.10,200 ரொக்கப்பணத்தை திருடிக் கொண்டு தப்பினார். அவரைப் பின்தொடர்ந்து விரட்டியபோது அந்த நபர் கீரம்பூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்த முத்துசாமி மகன் லெனின் என்கிற லெனின்குமார் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கார்த்திக் துறையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் லெனினை கைது செய்தனர். அவரிடமிருந்த பணத்தையும் மீட்டு வழக்கு பதிவு செய்து துறையூர் குற்றவியல் நடுவர் நர்மதா ராணி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post துறையூர் அருகே வாலிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article