சென்னை: துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டதாக புகார் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கண்டனம் தெரிவித்துள்ளார். “சட்டமன்றத்தில் 2 முறை நிறைவேறிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதால் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகுதான் தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் துணைவேந்தர் மாநாட்டை கூட்டியுள்ளார் ஆளுநர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அறிந்து மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். தீர்ப்பை அறிந்து மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணித்ததற்கு மாநில அரசு எப்படி பொறுப்பாகும்? . உச்சநீதிமன்ற தீர்ப்பும் சட்டமும் துணைவேந்தர்களுக்கு தெரிகிறது; ஆனால் எல்லாம் தெரிந்தும் ஆளுநர் வீம்புக்கு அரசியல் செய்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் சட்டவிரோதமாக மாநாட்டை கூட்டியுள்ளார் ஆளுநர் ரவி” என அமைச்சர் கோவி.செழியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டதாக புகார் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கண்டனம் appeared first on Dinakaran.