துணைவேந்தர் நியமனம்: புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணை வெளியிட வேண்டும் - கவர்னர் ஆர் என் ரவி

6 months ago 21

சென்னை,

துணைவேந்தர் நியமனம் விவகாரத்தில் புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

உயர்கல்வி அமைச்சருக்கு தவறாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு குழுவில் வேண்டுமென்றே பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினர் தவிர்க்கப்பட்டிருக்கிறார். 3 பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்தால், அது நீதிமன்றத்தால் நிராகரிப்பட நேரிடும்.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை சேர்த்து புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணையை வெளியிட வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article