வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

4 hours ago 1

கொழும்பு,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் தொடர் நிறைவடைந்தவுடன் இவ்விரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாக உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரரான தசுன் ஷனகா ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து இடம்பெற்றுள்ளார். மேலும் ஹசரங்கா பதிரனா, தீக்ஷ்னா போன்ற திறமையான வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விவரம் பின்வருமாறு:- சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷனகா,துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஸ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, சாமிக்க கருணாரத்னே,மதீஷா பதிரனா, நுவான் துஷார, பினுர பெர்னாண்டோ மற்றும் எஷான் மலிங்கா. 

Read Entire Article