எஸ்.ஜே.சூர்யாவின் "கில்லர்" படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்

6 hours ago 2

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு ''கில்லர்'' எனப்பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி இணைந்திருக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. அதில், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 'கில்லர்' பட பூஜையின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதற்கிடையில், கில்லர் படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்தநிலையில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பினை எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Yah it's none other than OUR ISAI PUYAL , THE MUSICAL LEGEND, INDIAN PRIDE, OUR ONE N ONLY @arrahman sir sirrrr welcome on board sir immensely happy joining you again sir #killer@GokulamGopalan #VCPraveen#BaijuGopalan#Krishnamoorthypic.twitter.com/kC9XPIs9mo

— S J Suryah (@iam_SJSuryah) July 7, 2025
Read Entire Article