துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது: அமைச்சர் ரகுபதி

4 months ago 18

சென்னை: துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்,

வழக்குகளில் சிக்கியவர்களை சேர்ப்பது பாஜகதான்

வழக்குகளில் சிக்கியவர்கள், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பது பாஜக மட்டுமே என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக தங்கள் கட்சியில் சேர்த்துள்ளதை பலமுறை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது. யாருடைய இறுதி ஊர்வலத்திலும் கூட்டம் அதிகளவில் இருந்தால் அங்கு போலீஸ் பாதுகாப்பு இருப்பது அவசியம். அம்பேத்கர் விவகாரத்தில் ஜெயக்குமார் கருத்துகளை கூறினால், பொதுச்செயலாளர் பதவி எதற்கு?.

ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது

துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது. தேடுதல் குழுவில் 3 பேரைத்தான் நியமிக்க முடியும், 4வதாக யுஜிசியில் இருந்து ஒருவரை நியமிக்க ஆளுநர் கூறுகிறார். தேடுதல் குழுவில் புதிதாக யாரையும் சேர்ப்பதில்லை, நீதிமன்றத்துக்கு சென்றால் எங்கள் நியாயத்தையும் கூறுவோம் என தெரிவித்தார்.

 

The post துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Read Entire Article