துணை முதல்வர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

4 months ago 12

போடி, ஜன.6: போடி அருகே கோடாங்கிபட்டியில், தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாரும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் தலைமை தாங்கி, கண் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, வலையப்பட்டியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்புக், பேனா, பென்சில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் உயர்நிலை செயல் திட்ட உறுப்பினர் மூக்கையா, போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன், போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பன், தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப் கான், மாவட்ட துணைச் செயலாளர் திருகண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான் ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளார் ஜெயக்குமார் செய்திருந்தார்.

The post துணை முதல்வர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article