துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாஜ நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

1 month ago 6

மதுராந்தகம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பாஜ நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கருங்குழி பேரூர் திமுக சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தசரதன் ஆகியோர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, மேலவலம்பேட்டை ஜங்ஷன் பகுதியில் 500 ஏழை எளியவர்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கருங்குழி பேரூர் பாஜக இளைஞர் அணி நிர்வாகி மோகன் உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட மாற்றுக் கட்சி இளைஞர்கள் 10 பேர் திமுகவில் இணைந்தனர். இதில், புதிதாக இணைந்தவர்களை பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி சால்வை அணிவித்து கட்சியில் இணைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணியினர், பேரூர் கிளை செயலாளர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் இதே போன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் பொன்.சிவக்குமார் சரவம்பாக்கம் ஜங்ஷன் பகுதியில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, வில்வராயநல்லூர் கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், முதியோர்களுக்கும் மதிய உணவு வழங்கினார். மேலும், மாற்று திறனாளிகள் இல்லம் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் மத்திய உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ராஜாராம கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிகாமணி, ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், சக்கரபாணி, தனபால், குமார், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி தரணிபதி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

The post துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாஜ நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article