துணை நடிகர் ஜெயசீலன் காலமானார்

6 hours ago 1

சென்னை,

நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என பல படங்களில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயசீலன். 40 வயதான அவர் கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மஞ்சள்காமாலை தீவிரமடைந்து சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சினிமா துறையில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயசீலன் திருமணமே செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

நடிகர் ஜெயசீலனின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

`தெறி' புகழ் ஜெயசீலன் மறைவு.. ``இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா..!'' சோகத்தில் திரையுலகம் https://t.co/ID1LwbAN3H#Kollywood #ActorJayaseelan #Theri #Pudupettai

— Thanthi TV (@ThanthiTV) January 24, 2025
Read Entire Article