சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: இயக்குனர் அமீர் கோர்ட்டில் ஆஜர்

4 hours ago 1

சென்னை,

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜாபர்சாதிக்கின் சகோதரர் முகமது சலீமும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீதும், ஜாபர்சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்பட 8 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி எழில்வேலவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருந்து ஜாபர்சாதிக், முகமது சலீம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 5 பேர் கோர்ட்டில் ஆஜராகினர்.

விசாரணைக்கு பின்பு, வழக்கை பிப்ரவரி 7-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Read Entire Article