தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு.. இலங்கையில் உள்ள தங்கள் நாட்டு மக்களை உடனடியாக வெளியேற இஸ்ரேல் அறிவுறுத்தல்..!!

3 weeks ago 6

கொழும்பு: தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதால் இலங்கையில் உள்ள தங்கள் நாட்டு மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள சில அமைப்புகள் இஸ்ரேலை சேர்ந்த யூத மக்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அந்நாட்டு அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இலங்கையில் உள்ள தனது நாட்டு குடிமக்களை வெளியேற்றுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது.

குறைந்தபட்சம் பாதுகாப்பு நடவடிக்கை அதிகம் உள்ள கொழும்பு நகருக்கு செல்லும் மாறு அவர்களை இஸ்ரேல் கேட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்த சிலர் சதி செய்வதாக கடந்த 7ம் தேதி உளவு தகவல் கிடைத்து இருப்பதாக கூறியுள்ள இலங்கை காவல்துறையினர் முக்கிய சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, அறுகம்பே, வெலிகமை உள்ளிட்ட இடங்களில் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லையோர பகுதியான அறுகம்பே, தெற்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் தங்கி உள்ளதால் அந்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் உள்ள அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நாட்களின் தூதரகங்கள் தங்கள் நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

The post தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு.. இலங்கையில் உள்ள தங்கள் நாட்டு மக்களை உடனடியாக வெளியேற இஸ்ரேல் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article