தீராத வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

2 weeks ago 2

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்து அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (45). இவரது, மகன் பாலாஜி (22), 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு சொந்தமாக ஜெராக்ஸ் கடை கடத்தி வந்துள்ளார். இவர், அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டிலிருந்த அனைவரும் நெசவு வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், தனிமையில் இருந்த பாலாஜிக்கு காலை 11 மணியளவில் கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த பாலாஜி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாலையில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பாலாஜியின் தாய், தூக்கிட்ட நிலையில் மகன் இறந்து கிடப்பதைப்பார்த்து கதறி அழுந்துள்ளார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தீராத வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article