பணியை தடுத்து நிறுத்தி பள்ளத்தில் இறங்கி காங்கிரசார் போராட்டம்

3 hours ago 1

கடலூர், பிப். 8: கடலூர் மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலக சாலையில் ஏராளமான கடையில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த கடைகள் அகற்றப்பட்டு மாநகராட்சி சார்பில் சாலை விரிவாக்க பணியும், நடைபாதைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் ₹2½ கோடி மதிப்பில் சுமார் 50 கடைகள் கொண்ட வணிக வளாகம் ஒன்று கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் அங்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த பள்ளத்தில் இறங்கி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், இந்த வணிக வளாகம் கட்டுவதற்கு பின்புறத்தில் எங்கள் கட்சி அலுவலகம் உள்ளது. எங்கள் கட்சி அலுவலகத்தை மறைத்து வணிக வளாகம் கூடாது. நாங்கள் சுமார் 70 ஆண்டு காலமாக இதை பயன்படுத்தி வருகிறோம். எனவே இங்கு வணிக வளாகம் கட்டக்கூடாது.

வேறு எங்காவது கட்டிக் கொள்ளுங்கள், என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து காங்கிரஸ் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, நாங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் வணிக வளாகம் கட்டுகிறோம். இதனால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதை இந்த பணியை நீங்கள் தடுக்கக்கூடாது என்று கூறினர். இதன் பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் அல்லது டிஎஸ்பி முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதன் பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளம் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.

The post பணியை தடுத்து நிறுத்தி பள்ளத்தில் இறங்கி காங்கிரசார் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article