தீபாவளியை யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க மத்திய அரசு கடிதம்

3 hours ago 3

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் பல்வேறு துணைக்கேள்விகளுக்கு கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவாத் பதிலளித்தார்.

அப்போது தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோவின் புலப்படாத கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்குமாறு மத்திய அரசு பரிந்துரை செய்திருப்பதாக கூறினார். இது தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டே மத்திய அரசு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம் மராட்டியத்தின் பந்தார்பூர் புனித யாத்திரையை இந்த பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக எந்த பரிந்துரையும் மத்திய அரசுக்கு வரவில்லை என்றும் கூறினார். இது தொடர்பாக மத்திய அரசு அல்லது சங்கீத நாடக அகாடமிக்கு மாநில அரசு பரிந்துரை அனுப்ப வேண்டியது கட்டாயம் என்றும் கூறினார்.

Read Entire Article