தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, சிறப்பு தொகுப்பு மூலம் ரூ.20.47 கோடி விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

6 months ago 17

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தரமான பட்டாசுகளை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து நேரடியாக கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.20.01 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை கடந்த 28ம் தேதி முதல் நடைபெற்றது.

இதில், பிரீமியம் மற்றும் எலைட் என இரண்டு வகையாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இனிப்புகள் செய்வதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய “அதிரசம்-முறுக்கு காம்போ” என்ற விற்பனை தொகுப்பும் குறைந்த விலையில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 20,000 தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே போல, வரும் பொங்கல் திருநாளிலும் இது போன்ற சிறப்பு விற்பனையை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரிய முறையில் ஏற்பாடு செய்திடவும், சிறப்பாக மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, சிறப்பு தொகுப்பு மூலம் ரூ.20.47 கோடி விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article