தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

2 weeks ago 5

உளுந்தூர்பேட்டை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சார சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனை நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று நடந்த உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் அதிகாலை முதலே கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆடு வியாபாரிகள் தங்களுக்கு தேவையான ஆடுகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

லாரி, மினி லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் வந்து ஆடுகளை வாங்கி சென்றதால் உளுந்தூர்பேட்டை-சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை என்பதால் ஆடுகளின் விலை வழக்கத்தை விட கூடுதலாக ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரையில் விற்பனையானது. மேலும் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article