பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு

2 hours ago 1

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பெரிய சோலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பழங்குடியினர் உள்ளிட்ட 53 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறாததால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்குள் அடிக்கடி பள்ளி வளாகத்திற்குள் புகுந்து வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்து இரண்டு நாட்களுக்கு முன் இங்குள்ள வகுப்பறையில் பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை பார்த்த மாணவர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து பாம்பை பிடித்துச் சென்றனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை, கழிவறைகளின் கதவுகள் சேதமடைந்துள்ளதால் அவற்றில் உள்ள ஓட்டைகள் வழியாக பாம்புகள் உள்ளே வந்து விடுவதாகவும், இது மாணவர்களுக்கு ஆபத்தை விளைக்கும் வகையில் உள்ளதால் பள்ளி வளாகத்தை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

The post பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு appeared first on Dinakaran.

Read Entire Article