தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ₹1 கோடிக்கு ஆடு விற்பனை

3 months ago 14

உளுந்தூர்பேட்டை, அக். 24: தீபாவளியை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் நேற்று ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆடு சந்தை வாரந்தோறும் புதன் கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆடு வளர்ப்பவர்கள் தங்களது ஆடுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு நேற்று நடந்த ஆடு சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனை நடந்தது. ஒரு ஆட்டின் விலை ரூபாய் 5000ல் இருந்து ரூ.15 ஆயிரம் வரையில் விற்பனை ஆனது. இந்த ஆடுகளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு வியாபாரிகள் மினி டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வந்து தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேற்று நடந்த ஆடு சந்தையில் ரூபாய் ஒரு கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ₹1 கோடிக்கு ஆடு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article