தீபாவளி நெரிசலை ஒட்டி பிளாட்பார்ம் டிக்கெட் 2 நாட்கள் கிடையாது: ரயில்வே கோட்டம் அறிவிப்பு

3 months ago 13

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பிளாட்பார்ம் டிக்கெட்கள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் விற்கப்படாது என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. தீபாவளிக்காக பயணிகள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் தெற்கு ரயில்வேயின், சென்னை கோட்டத்திற்குட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. எனவே பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டு பாதுகாப்பான அனுபவத்திற்காக புதிய விதிமுறைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தீபாவளி நெரிசலை ஒட்டி பிளாட்பார்ம் டிக்கெட் 2 நாட்கள் கிடையாது: ரயில்வே கோட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article