'திரைத்துறையில் எனது வெற்றிக்கு அது முக்கியமானது' - பிரபல தெலுங்கு நடிகை

1 month ago 8

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு நடிகை காமக்சி பாஸ்கர்லா. இவர் நடித்த திகில் திரைப்படமான "பொலிமேரா" இவரது சினிமா கெரியரில் திருப்புமுனை படமாக அமைந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் காமக்சி பாஸ்கர்லா. இதன் மூலம் தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது அல்லரி நரேஷ் நடிக்கும் "12 ஏ ரெயில்வே காலனி" என்ற ஹாரர் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது சினிமா அனுபவத்தை காமக்சி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "சிறந்த அம்சம் என்னவென்றால், எனது எல்லா படங்களிலும், நான் வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறேன். ஒவ்வொரு பாத்திரமும் ஒரு புதிய பயணம். பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பது திரைத்துறையில் எனது வெற்றிக்கு முக்கியமானது," என்றார்.

Read Entire Article