
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ், பொருளாதாரம், வணிகவியல், கணக்குபதிவியல், கணினி பயன்பாடு ஆகிய 5 பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். பழனி பாரத் வித்யா பவன் பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவிக்கு ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ-மாணவிகள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.