திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டும் பணிநடைபெற்று வருகிறது. இந்த பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ள நிலையில், பல இடங்களில் கால்வாய்கள் இணைக்கப்படாமல் உள்ளது.
இதன்காரணமாக மழைக்காலத்தின்போது மழைநீர் கால்வாய் வழியாக வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும் ஆபத்துள்ளது. இதுசம்பந்தமாக திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள், ‘’தங்கள் வார்டுகளில் இணைக்கப்படாமல் உள்ள மழைநீர் கால்வாய்களை மழைக்காலம் துவங்குவதற்கு முன் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மழைநீர் கால்வாய்களை இணைக்கவும் அதில் உள்ள மணல், குப்பையை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே நெடுஞ்சாலையில் இணைக்கப்படாமல் உள்ள பிரதான மழைநீர் கால்வாயை இணைக்கும் பணி துவங்கியது. மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு நேரில் ஆய்வு செய்து, தொடர்ச்சியாக அனைத்து இடங்களிலும் கால்வாய்களையும் இணைக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
The post திருவொற்றியூர் பகுதிகளில் கால்வாய் இணைப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.