திருவேளுக்கை அழகிய சிங்கப்பெருமாள் கோயில்

1 hour ago 3

வாழ்வில் பெற்றோருக்கு அடுத்து இப்பூலகில் நம்மை காப்பாற்றுவதற்கு நம்பிக்கை கொள்வது இறை சக்தியே. அந்த இறை சக்தியின் வழியே மாற்றத்தை ஏற்றத்தை பெறலாம் என இயற்கையும் இயற்கையின் வழியே ஜோதிடம் நமக்கு உணர்த்துகிறது. ஆகவே, ஜோதிடத்தின் வழியே நம்மால் இறை வழிபாடு செய்து வாழ்வை கடக்க முடியுமெனில் அதுவே நம் வாழ்வில் பெரிய ஒளி விளக்காகும். அதை வைத்துக் கொண்டு எளிதாக வாழ்வை கடக்கலாம் என்பதை நமக்கு ஜோதிடம் சொல்லித் தருகிறது. அதை உணர்ந்து கொள்வதே நம் பாக்கியம்.காஞ்சிபுரத்தில் உள்ள திருவேளுக்கை அழகிய சிங்கப் பெருமாள் 108 திவ்ய தேசங்களில் 46வது திவ்ய தேசமாக உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாக விளங்குகிறது.

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த பொழுது ஹஸ்தி சைலம் என்னும் குகையில் இருந்து புறப்பட்டார். ஹிரண்யனின் மாளிகையில் தூணில் வெளிப்பட்ட பொழுது வேறு ஒரு நரசிம்ம வடிவம் கொண்டு தம்மை தாக்க வந்த அசுரர்களை விரட்டிக் கொண்டே செல்ல இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். பயந்த நிலையில் இருந்த அசுரகள் கூட்டங்கள் கண்காணாத இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால் இனி அசுரர்க்ள வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது என எண்ணி அங்கேயே தங்க விருப்பம் கொண்டார்.இவ்விடத்தில் நரசிம்மர் யோக நரசிம்மராக அமர்ந்தார். பிருகு மகிரிஷிக்கு கனக விமானத்தில் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி கொடுத்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள அழகிய சிங்கப் பெருமாள் தெய்வத்திற்கு வியாழன், சூரியன், புதன் கிரகங்கள் பெயர் நாம கரணம் செய்து உள்ளது.

♦ ரிஷப ராசியில் இந்த வியாழன், சூரியன், புதன் கிரகங்கள் இணைவாக உள்ளவர்கள் ஞாயிறு அன்று மஞ்சள் வஸ்திரம் கொடுத்து மொச்சை பயிறும் கோதுமையில் செய்த இனிப்பான உணவையும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தால், உங்களின் தனஸ்தானம் பலம் பெறும். பொருளாதாரம் மேம்படும்.
♦ ரிஷப லக்னத்திற்கு 4ம் அதிபதியாக சூரியன் வருகிறார். ஆகவே, வீடு, மனை, வாகனம் ஆகியவற்றுள் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் சுவாமிக்கு இரண்டு முறை அர்ச்சனை செய்து கருப்பு நிற பசுவிற்கு உணவு தானம் செய்தால் பிரச்னைகள் சீராகும்.
♦ ரிஷப லக்னத்திற்கு வியாழன் 8ம் அதிபதியாகவும் 11ம் அதிபதியாகவும் வருவதால் வியாழக்கிழமை இக்கோயிலில் மஞ்சள் நிற வஸ்திரம் கொடுத்து பாலில் செய்த இனிப்பான பொருட்களை சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தால் வீடு, மனை வாங்கும் யோகமும் திருமண யோகமும் பூர்வீக சொத்தும் கிடைக்கப் பெறுவீர்கள்.
♦ நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து கருப்பு நிற பசுவிற்கு மஞ்சள் நிற வஸ்திரம் கொடுத்து உணவில் நவதானியத்தை மாவாக அரைத்து வெல்லம் கலந்து கொடுத்து வந்தால் வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். பெருமாள், தானே விரும்பி அமர்ந்த தலம். ஆதலால், திருப்பதிக்கு இணையாக பேயாழ்வாரால் குறிப்பிடப்பட்ட திருத்தலம்,பல ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் பாடப்பட்ட தலமாக சிறப்பு பெறுகிறது.

இத்தலத்திற்கு எப்படி செல்வது?

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

ஜோதிட ஆய்வாளர் திருநாவுக்கரசு

The post திருவேளுக்கை அழகிய சிங்கப்பெருமாள் கோயில் appeared first on Dinakaran.

Read Entire Article