திருவிழாவுக்கு மின்விளக்கு கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

1 week ago 5

விருதுநகர்: விருதுநகர் அருகே கோயில் திருவிழாவுக்காக அலங்கார மின்விளக்குகள் கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள காரிசேரியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று 45-வது நாள் மண்டல பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கிராமத்தில் ஒலிபெருக்கி மற்றும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

Read Entire Article