தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

7 hours ago 3

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நகர் பகுதியில் வசித்து வருபவர் புனிதன்(22) கூலி தொழிலாளி. இவரது மனைவி பவுசியா(19). இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பவுசியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து பவுசியா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தாராம். அதனால் பெண் வீட்டார் பவுசியாவுடன் வீட்டில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பவுசியா நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டு கதவை தட்டி பார்த்து பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பவுசியா தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும், பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடப்பதும் தெரிய வந்தது.

The post தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article