திருவிழா, முக்கிய நாட்களில் கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

1 day ago 1

தமிழ்நாடு சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பாக திருவிழா, முக்கிய நாட்களில் தமிழக கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:-

திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும். குறிப்பாக திருச்செந்தூர், ஶ்ரீரங்கம், ராமேசுவரம் உள்ளிட்ட 10 கோவில்களில் நடைபெறும் திருவிழா, முக்கிய நாட்களில் பக்தர்களுக்கான தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும்.

திருவண்ணாமலை கோவிலில் பவுர்ணமி தினத்தன்று கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியன்று கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும். பழனி தண்டாயுதபாணி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளன்று கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article