திருவாரூரில் புத்தக கண்காட்சி இலட்சினை கலெக்டர் வெளியிட்டார்

2 weeks ago 3

திருவாரூர், ஜன. 21: திருவாரூரில் வரும் 24ந் தேதி துவங்கவுள்ள 3வது புத்தகண்காட்சியினையொட்டி லோகோவினை கலெக்டர் சாரு வெளியிட்ட நிலையில் கண்காட்சி நடைபெறவுள்ள இடத்தினையும் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்ட புதியபேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் வரும் 24ந் தேதி முதல் அடுத்த மாதம் 2ந் தேதி வரை நடைபெறவுள்ள 3வது புத்தககண்காட்சியினையொட்டி லோகோ வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சாரு தலைமை வகித்தார். இதில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், ஆர்.டி.ஒ சௌம்யா, டி.எஸ்.பி மணிகண்டன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் லோகோவினை வெளியிட்டு கலெக்டர் சாரு பேசியதாவது, புத்தக கண்காட்சிக்கான லோகோ என்பது மாவட்டத்தில் சிறப்பினை குறிக்கும் வகையில் புகழ் பெற்ற ஆழித்தேர் வடிவில் புத்தகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புத்தக திருவிழாவில் மாநிலம் முழுவதும் இருந்து வரும் அனைத்து பதிப்பகத்தினரையும் பங்கு பெற செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புத்தககண்காட்சி நடைபெறவுள்ளது தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ப்ளக்ஸ் பேனர், சுவரொட்டி விளம்பரம், வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்டவைகளில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. கண்காட்சி நடைபெறும் நாட்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து வழித்தடத்திலும், சிறப்பு பேருந்துகள் இயக்கிட அனைத்து பேருந்து கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளது. கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் இசைப்பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு இசை நிகழ்ச்சிகளும், மாவட்ட காவல் துறையினர் மூலம் கண்காணிப்புபணிகள் மேற்கொள்ளவும், புத்தக விழா நடக்கும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சீராக வந்து செல்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தகக் கண்காட்சியில் தினந்தோறும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கென தனியாக புத்தக பரிசு கூப்பன் வழங்குவது தொடர்பாகவும், மாணவர்களுக்குப் பயன்படும் மின் நூல் மற்றும் பெரும்பாண்மை பதிப்பாளர்களின் படைப்புகளை கொண்ட விற்பனையகம் அமைப்பது குறித்தும், நூல் விற்பனையகங்கள் ஒரு கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையிலும் இந்த புத்தக கண்காட்சிக்கான அரங்குகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதனையடுத்து புத்தக கண்காட்சி நடைபெறவுள்ள இடத்தில் அமைக்கப்பட்டு வரும் அரங்குகள் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் சாரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்

The post திருவாரூரில் புத்தக கண்காட்சி இலட்சினை கலெக்டர் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Read Entire Article