திருவாரூர்,மே14: திருவாரூரில் நடைபெற்ற திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு ,தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் அனைத்து ஒன்றியங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக பொதுக்கூட்டமானது நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று திருவாரூர் நகர திமுக சார்பில் இந்த சாதனை விளக்க பொது கூட்டமானது திருவாரூர் ஐபி கோவில் தெருவில் கட்சியின் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ வுமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில், தியாகபாரி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் சங்கர், நகர பொருளாளர் ரஜினி சின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வாரை பிரகாஷ் வரவேற்றார்.
இதில் தலைமை கழக பேச்சாளர்கள் ஆரூர் மணிவண்ணன், வரதராஜன். இளம் பேச்சாளர் தங்க குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டுபேசினர்.மேலும் நகர துணை செயலாளர்கள் மணிமாறன், ரெங்கநாயகி, மாவட்ட பிரதிநிதிகள் அசோகன், ராமு மற்றும் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவாரூரில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.