இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளின் மதகுகள் அடைக்கப்பட்டன. சண்டை முடிவுக்கு வந்த பிறகும் கூட சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் முடிவு தொடரும் என இந்திய அரசு அறிவித்தது.
நேற்று பஞ்சாபின் ஆதம்பூரில் தண்ணீரும் ரத்தமும் ஒரு சேர ஓட முடியாது என்று மோடி பேசியிருந்தார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய ஜல்சக்தி அமைச்சக செயலாளருக்கு பாகிஸ்தான் நீர்வள அமைச்சக செயலாளர் சையது அலி முர்தாஸா கடிதம் எழுதியுள்ளார். அதில், தண்ணீர் நிறுத்தி வைத்திருப்பதால், நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகி வருகிறது. எனவே, தண்ணீரை திறந்து விட வேண்டும். சிந்து நதி தொடர்பான பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியாவுக்கு பாக். கோரிக்கை appeared first on Dinakaran.