திருவாடானை, மார்ச் 29: திருவாடானை அருகே பழங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி நவமணி முன்னிலை வகித்தார். ஆசிரியை மங்களேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் ஆரோக்கியதாஸ், தொண்டீஸ்வரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். பள்ளி ஆண்டறிக்கையை தலைமையாசிரியை பிரிட்டோ ஜஸ்டின் ஜூலியத் செல்வி வாசித்தார். இதையடுத்து, மாணவ – மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, நடனம் மற்றும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை முன்னாள் ஆசிரியர் துரைராஜ் வழங்கினார். விழாவில் மாணவர்களின் பெற்றோருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
The post திருவாடானை அருகே அரசுப் பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.