பாப் கார்ன் சிக்கன்

5 hours ago 3

தேவையான பொருட்கள்

1/4கி எலும்பில்லாத சிக்கன்
மசாலா செய்வதற்கு
1ஸ்பூன் மிளகாய் தூள்
1ஸ்பூன் தனியா தூள்
1ஸ்பூன் கரம் மசாலா தூள்
1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1ஸ்பூன் சோயா சாஸ்
1/4கப் தயிர்
தேவையானஅளவுக்கு உப்பு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி சிக்கனையும் அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.மேல் மாவு தயாரிக்க தேவையானவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த தண்ணிர் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.. ஊற வைத்த சிக்கனில் ஒரு பீசை எடுத்து மாவில் போட்டு பிரட்டி நன்றாக உதிர்த்து அதை குளிர்ந்த தண்ணீரில் முக்கி எடுத்து மீண்டும் மாவில் போட்டு உதிர்த்து எடுத்து வைக்கவும்.அப்படி பிரட்டி எடுத்த சிக்கனை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சிக்கன் பாப் கான் தயாராகிவிடும்.இப்போது சூடான சுவையான சிக்கன் பாப்கான் தயார்

The post பாப் கார்ன் சிக்கன் appeared first on Dinakaran.

Read Entire Article