திருவள்ளூர் தொகுதியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற கலெக்டரிடம் எம்எல்ஏ கோரிக்கை

1 week ago 3

திருவள்ளூர்: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் கடம்பத்தூர், பூண்டி, திருவாலங்காடு, ஒன்றியங்கள் மற்றும் திருவள்ளூர் நகராட்சி ஆகியவை உள்ளன. இந்நிலையில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தன்னிடம் பொதுமக்கள் தரும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார். மேலும் தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் பொதுமக்கள சாலை வசதி, குடிநீர் வசதி, பகுதி நேர நியாய விலைக் கடைகள், இலவச வீட்டு மனைகள், நெடுங்காலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டாக்கள் வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, கலெக்டர் மு.பிரதாபிடம் நேற்று வழங்கினார். அப்போது அடிப்படை தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.மகாலிங்கம், கூளூர்.எம்.ராஜேந்திரன், அரிகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் நேதாஜி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோதிலால், பாஸ்கரன், கொப்பூர் திலீப் குமார், சரவணன், வாசு ஆகியோர் உடன் இருந்தனர்.

The post திருவள்ளூர் தொகுதியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற கலெக்டரிடம் எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article