திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் புதியவகை க்ரீன் மேஜிக் பிளஸ் பால் நாளை அறிமுகம்: ஆவின் விற்பனை முகவர்கள் மகிழ்ச்சி

4 weeks ago 7

திருவள்ளூர்: ஆவின் நிர்வாகம் புதியவகை க்ரீன் மேஜிக் பிளஸ் பால் நாளை அறிமுகம்படுத்தால் பால் விற்பனை முகவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆவின் நிர்வாகம் புதியவகை க்ரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வகையான பாலில் 4.5 சதவிகிதம் கொழுப்பு மற்றும் 9 சதவிகிதம் இதரச்சத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த வகையான கொழுப்பு சத்து மற்றும் இதர சத்து அதிகம் உள்ளதால் பால் மிகவும் தரமாகவும் மற்றும் சுவையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் பொதுமக்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி செறிவூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. எனவே இந்த க்ரீன் மேஜிக் பிளஸ் பால் கண்டிப்பாக மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நாளை (18ம் தேதி) முதல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் இந்த புதியவகை க்ரீன் மேஜிக் பிளஸ் பால் ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் க்ரீன் மேஜிக் பிளஸ் பாலை ரூ.62 முதல் ரூ.66 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் ஒப்பிடும்போது சுமார் ரூ.10 முதல் ரூ.14 வரை விலை குறைவாக ஆவின் நிர்வாகம் விலை நிர்ணயம் செய்துள்ளது வரவேற்கதக்கது.

மேலும் பல ஆண்டுகளாக பால் விற்பனை முகவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே கமிஷன் தொகையை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து பால் விற்பனை முகவர்களும் கேட்டுக் கொள்கிறோம். இந்நிலையில், புது வகையான க்ரீன் மேஜிக் பிளஸ் பாலை விற்பனை செய்ய அனைத்து பால் விற்பனை முகவர்களும் ஆர்வமாக உள்ளோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பால் விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் புதியவகை க்ரீன் மேஜிக் பிளஸ் பால் நாளை அறிமுகம்: ஆவின் விற்பனை முகவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article