திருவள்ளூர்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்த பெண் கைது

12 hours ago 1

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் செம்புலிவரம் மேடு பகுதியைச் சேர்ந்தவர் பவானி (35 வயது) இவர், ஏலச்சீட்டு, தீபாவளி மற்றும் நகை பண்டு நடத்தி வந்தார். இவரிடம் பாபு என்பவர் ரூ.3 லட்சம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். ஆனால் தவணை காலம் முடிந்து ஏலச்சீட்டு செலுத்திய பணத்தை தராமல் பவானி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பாபு அளித்த புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பவானி ஏலச்சீட்டு நடத்தி பாபு உள்பட 50-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.78 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்ட பவானியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read Entire Article