
சென்னை,
பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹிட் 3'. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரித்துள்ள இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாள் வசூலில் மட்டும் உலக அளவில் ரூ. 43 கோடி வசூலித்து, நானியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இத்திரைப்படம் இதுவரை உலகளவில் 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மே 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.