திருவண்ணாமலையில் 12-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

3 days ago 4

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்ரா பவுர்ணமியும் ஒன்றாகும். சித்ரா பவுர்ணமி வருகிற 11-ந் தேதி இரவில் தொடங்கி 12-ந் தேதி இரவில் நிறைவடைகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் கிரிவலம் செல்ல உள்ளனர்.

இதையொட்டி திருவண்ணாமலை தாலுகா மற்றும் நகர பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, மணலூர்பேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, வேங்கிக்கால் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, சமுத்திரம் பகுதியில் உள்ள மதுபான கடை, திருவண்ணாமலை நகரத்தில் இயங்கி வரும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக் கூடங்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, வேங்கிக்கால் எம்.எல். 4 ஏ உரிமம் பெற்ற மதுபான கடைகள், மதுக்கூடங்களுக்கு வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) மது விற்பனை நடைபெறாமல் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்து உள்ளார்.  

Read Entire Article