
சென்னை,
இசையமைப்பாளராக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி உள்ளவர் யுவன் ஷங்கர் ராஜா. தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள இவர் தற்போது தெலுங்கில் முதல் முறையாக ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
இளையராஜா இசையமைப்பில் பவன் பிரபா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ஷஷ்டிபூர்த்தி'. ரூபேஷ் மற்றும் ஆகான்ஷா சிங் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. சைதன்யா பிரசாத் எழுதிய இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நித்யா ஸ்ரீ ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.