திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமாக பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமாக பரணி தீபம் அதிகாலை 3.30 மணிக்கு கோவில் கருவறை முன்பு ஏற்றப்பட்டது. மூன்று நாள் விழாவின் முதல் தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. இது கார்த்திகை மாதம் பரணி நட்சத்திர நாளில் ஏற்றப்படும் தீபம் ஆகும்.
அதையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. கொட்டும் மழையிலும் மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று அதிகாலை தொடங்கி தொடர்ந்து மழை நீடித்த போதும், வழக்கமான உற்சாகத்துடன் விழா நடந்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். மகா தீபத்தை முன்னிட்டு, கோயில் கோபுரம் மற்றும் கோயில் வளாகம் மின்விளக்குகளால் ஜொலிப்பதால் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கருவறையில் பரணி தீபம் ஏற்றம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.