திருமலை, திருப்பதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு

12 hours ago 4

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் மக்களுக்கான சாமி தரிசனம் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசன ஒதுக்கீடு தொடர்பான டோக்கன்களை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேவஸ்தானம் வழங்க உள்ளது. திருப்பதி மகதி கலையரங்கில் உள்ள கவுண்ட்டர்களில் திருப்பதியில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கும், திருமலை பாலாஜி நகர் சமுதாய மண்டபத்தில் உள்ள கவுண்ட்டர்களில் திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கும் சாமி தரிசன டோக்கன்கள் அதிகாலை 5 மணியில் இருந்து வினியோகம் செய்யப்படுகின்றன.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சாமி தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.திருப்பதி நகர்ப்புறம், திருப்பதி கிராமப்புறம், சந்திரகிரி மற்றும் ரேணிகுண்டா மண்டலங்களை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள், மக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தங்களுடைய ஆதார் அட்டையைக் காண்பித்து மேற்கண்ட இடங்களில் டோக்கன்களை பெற்று, 6-ந்தேதி செவ்வாய்க்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article