சொத்து வரி மீண்டும் உயர்வா? ; தமிழக அரசு மறுப்பு

14 hours ago 3

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக வெளியான நாளிதழ் ஒன்றில் இன்று செய்தி வெளியானது. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது, சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒன்றிய அரசின் 15-வது நிதிக்குழுவின் நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு நகர்ப்புற அமைப்பும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியின் சதவிகிதத்தை ஒப்பிடுகையில் சராசரியாக 11.5 சதவிகிதம் சொத்துவரி வருவாயை உயர்த்தினால் மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையைக் கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சொத்துவரி அரசாணை எண்.113, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (எம்ஏ4) துறை, நாள் 5.9.2024-ன்படி 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், 3.5.2025 நாளிட்ட ஒரு நாளிதழில் "எவ்வித அறிவிப்புமின்றி உள்ளாட்சி அமைப்புகள், 6 சதவிகிதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக" வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article