திருமணம் ஆகாததால் விரக்தி: தொழிலாளி தற்கொலை

6 months ago 20

கோவை,

கோவை அருகே உள்ள ஜோதிபுரம் கவிதா பர்னிச்சர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (45 வயது). இவர் தெற்குபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் வரன் பார்த்தும், மணப்பெண் அமையவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நடராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article