திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் வீட்டை தீ வைத்து எரித்த இளைஞன் - அதிர்ச்சி சம்பவம்

2 months ago 13

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் பஹ்ட்ராக் மாவட்டம் வித்யார்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜோதி ராஜன் தாஸ் (வயது 28). இவரும் அண்டை கிராமமான ஆனந்த்பூரை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்துள்ளனர்.

இதனிடையே, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலியிடம் ராஜன் கேட்டுள்ளார். திருமணத்திற்கு மறுத்தால் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண், ராஜன் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ராஜன் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ராஜன் , நேற்று தனது காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜன், தனது காதலியின் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.

இந்த சம்பவத்தில் தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள், கட்டில், மெத்தை என மொத்தம் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Read Entire Article