திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோன் சட்டப்படி ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் ஒப்படைப்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

4 weeks ago 4

சென்னை: மாதவரம் நடேசன் நகரில் உள்ள மாரியம்மன் கோயில் வலுவிழுந்து உள்ளதால் அறநிலையத்துறை சார்பில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் கருங்கற்களால் புதியதாக புரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து வேணுகோபால் நகரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் கோயிலின் திருக்குளத்தையும் பார்வையிட்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், இணை ஆணையர் ரேணுகாதேவி, கூடுதல் ஆணையர் சுகுமார், திமுக பகுதி செயலாளர்கள் துக்காராம், புழல் நாராயணன், முன்னாள் கவுன்சிலர் நாஞ்சில்ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு அளித்த பேட்டி: இந்த மாதம் 3 கோயில்களில் பிரிக்கப்பட்ட தங்கங்களை ஒன்றிய அரசின் உருக்கு ஆலைக்கு அனுப்பி வைத்துள்ளோம். மாசாணியம்மன் கோயிலின் 28 கிலோ தங்கம், திருச்சி மானசாகர், 12 கிலோ தங்கம், பழனியில் 192 கிலோ தங்கம் ஆகியவை உருக்கு ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 27ம் தேதி சமயபுரத்திலிருந்து 500 கிலோ அளவிற்கு தங்கத்தை மும்பையில் உள்ள உருக்கு ஆலைக்கு அனுப்பப்படும். திருப்போரூர் முருகன் கோயிலில் உண்டியலில் விழுந்த பக்தரின் ஐ போன் துறையின் விதிவிலக்கு இருக்கிறதா என்று சட்டப்படி ஆராய்ந்து, சாத்தியக்கூறு இருந்தால் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோன் சட்டப்படி ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் ஒப்படைப்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article