சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி முடிவடைந்த நிலையில், நூல் மொழிப் பெயர்ப்புக்காக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனுடன் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் 105 நூல்களையும் வெளியிட்டார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னையில் 2023ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3-வது ஆண்டாக சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜன.16ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதன் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் 30 மானிய மொழிப் பெயர்ப்பு புத்தகங்கள் உட்பட தமிழக பாடநூல் கழகம் தயாரித்த 105 நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.