திருப்பூர் மூலிக் குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றம்

1 month ago 7

 

திருப்பூர், அக்.14: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் மூலிக்குளம் ஏரி உள்ளது. திருப்பூர் நகரத்தின் மையப் பகுதியான அணைக்காடு பகுதியில் இருந்து தொடங்கும் இந்த வாய்க்கால் சுமார் 2.5 கி.மீ தொலைவிற்கு பயணித்து பாளையக்காடு, கருமாரபாளையம் மற்றும் மண்ணறை வழியாக மூலிக்குளம் வந்து சேர்கிறது. நகரத்தின் பகுதிகளின் வழியாக வருவதால் பல இடங்களில் புதர் மண்டியும்,சாக்கடைகளால் சேறும் சகதியுமாக இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தன்னார்வ அமைப்புகளின் சார்பில் வாய்க்கால் தூர்வாரப்பட்டது.

கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக மூலிக்குளம் நிரம்பிக் காட்சி அளித்தது. இந்நிலையில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து நொய்யல் ஆற்று தண்ணீர் வருவதற்கு இடையூறாக இருந்தது. தொடர்ந்து நேற்று தன்னார்வ அமைப்புகள் சார்பில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டது. இங்கு தண்ணீர் சேகரித்து வைக்கப்படுவதன் மூலம் இதனைச் சுற்றி 3 கி.மீ தூரத்திற்கு நிலத்தடி நீர் செரிவூட்டப்பட்டு பொதுமக்கள் பயனடைய வாய்ப்புள்ளது.

The post திருப்பூர் மூலிக் குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article