திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோர் காயம்

2 hours ago 1

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பல்ல கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று காலை 9.15 மணியளவில் திருப்பூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக ஒரு தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கண்டெய்னர் லாரியை முந்த முயன்ற போது நிலைதடுமாரி பேருந்து கவிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பெரியசாமி (19), ஹரி (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் மற்றும் போலீசார் பலத்த காயமாடைந்தவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

The post திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article