சென்னை: தர்மபுரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளராக தர்மசெல்வன், திருப்பூர் வடக்கு மாநகரக் கழகப் பொறுப்பாளராக தங்கராஜ் ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவில் கடந்த சில நாட்களாக புதிய மாவட்டங்களை ஏற்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் மாவட்டங்களில் செயலாளர்களை மாற்றி விட்டு பொறுப்பாளர்களை நியமிப்பது போன்ற பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தர்மபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தர்மசெல்வன் நியமிக்கப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அதேபோல, திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தினேஷ்குமார் திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற தங்கராஜ் திருப்பூர் வடக்கு மாநகரக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகரக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post திருப்பூருக்கு பொறுப்பாளர் நியமனம் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாற்றம்: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.