ஆர்.எஸ்.மங்கலம், ஜன 11: திருப்பாலைக்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைக்கு, உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சீல் வைத்து அபராதம் விதித்தனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங் காலோன் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் போலீசார், திருப்பாலைக்குடியில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகள் மற்றும் பள்ளி அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில் ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த கடையை பூட்டி சீல் வைத்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
The post திருப்பாலைக்குடியில் புகையிலை விற்ற கடைக்கு சீல்: ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.