என்னை படுகொலை செய்தால் ஈரானில் எதுவும் எஞ்சியிருக்காது; ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு; அடுத்த அதிபர் குறித்தும் பகீர் தகவல்

2 hours ago 1

நியூயார்க்: என்னை படுகொலை செய்தால் ஈரானில் எதுவும் எஞ்சியிருக்காது என்று கூறிய டிரம்ப், ஏற்கனவே நிவாரண நிதி உதவியை நிறுத்திய நிலையில் ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக அறிவித்தார். ஈரானுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனால் மேற்கண்ட நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015ல் கூட்டு விரிவான செயலாக்கத் திட்டம் உருவாக்கப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஈரான் அதன் அணுசக்தித் திட்டங்களைப் பெரிதும் குறைத்துக்கொள்வதற்கு ஈடாக அதன் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டன. ஆனால், 2018ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு ஏற்ப அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அதைத் தொடர்ந்து ஈரானும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த அணுசக்தி தொடர்பான கடப்பாடுகளிலிருந்து விலகத் தொடங்கியது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் வந்துள்ளதால், அவர் ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஈரான் மீதான உலகளாவிய தடைகள் அனைத்தையும் மீண்டும் நடப்புக்குக் கொண்டுவரத் தயார் என்று இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் உறுதியளித்துள்ளன.

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக அதிகபட்ச அழுத்தம் கொடுக்கும் தனது நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகள் தீவிரமாக்கப்படும். ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மேற்கண்ட உத்தரவுகள் மட்டுமின்றி ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனத்திற்கான நிதியை டிரம்ப் குறைத்து உத்தரவிட்டார். தற்போது இந்த உத்தரவில் கையெழுத்திட்டார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வது தொடர்பான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். மேற்கண்ட உத்தரவுகளின் மூலம் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம்

காசாவை அமெரிக்கா கையகப்படுத்தும்;
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘போரினால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடான காசா பகுதியை அமெரிக்கா கையகப்படுத்தும். காசாவில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பேரழிவை சந்தித்த காசா மீண்டும் கட்டியெழுப்பப்படும். காசாவை எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்போம். காசா பகுதியில் இருக்கும் வெடிக்காத குண்டுகள், பிற ஆயுதங்களை அகற்றும் பணியில் ஈடுபடுவோம். காசாவை மறுசீரமைப்போம். தேவைப்பட்டால் இப்பணிக்கு ராணுவத்தை ஈடுபடுத்துவோம். காசாவில் யார் வசிப்பார்கள்? என்று கேட்கின்றனர். அங்கு வாழும் உலக மக்கள் யார்? என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன். ஆனால் நீங்கள் நம்பமுடியாத சர்வதேச இடமாக மாற்றுவோம். எனது திட்டங்கள் மனிதாபிமான அடிப்படையிலும், உயரிய நோக்கிலும் இருக்கும்’ என்று கூறினார். டிரம்பின் இந்த அறிவிப்பு பாலஸ்தீன மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. காசாவில் வசிக்கும் இரண்டு மில்லியன் பாலஸ்தீன மக்களை வெளியேற்றும் திட்டத்தை டிரம்ப் அறிவித்து இருப்பது, ‘இன அழிப்பு’ என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. முஸ்லீம் நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் முக்கிய மையப்புள்ளியாக இருக்கும் காசாவை, அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக கூறியிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

The post என்னை படுகொலை செய்தால் ஈரானில் எதுவும் எஞ்சியிருக்காது; ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு; அடுத்த அதிபர் குறித்தும் பகீர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article