கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் தோண்டியபோது நிகழ்ந்த சோகம்.. ஐதராபாத்தில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழப்பு!!

2 hours ago 1

ஐதராபாத்: ஐதராபாத்தில் கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் தோண்டியபோது மண்சரிவு ஏற்பட்டு 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் எல்.பி.நகர் பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமியை தோண்டும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சுமார் 10 ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். இதில் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் சக ஊழியர்கள் அவர்களை மீட்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் முடியாத நிலையில், இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்போது ஒருவரின் சடலத்தை மீட்டனர். மேலும், 2 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் தோண்டியபோது நிகழ்ந்த சோகம்.. ஐதராபாத்தில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article